இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.   இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.  முதலில் பேட்டிங் செய்த…

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.  

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.  முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்கள் எடுத்தது.  இதனையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்னில் ஆல் அவுட் ஆனது.  இதனை தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது.  இன்னும் அந்த அணிக்கு 332 ரன்கள் தேவை இருந்தது.  கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தது.

இதையும் படியுங்கள்:  “குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார்” – ஹேமந்த் சோரன்

இந்த நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது.  23 ரன்னில் ரெஹன் அவுட் ஆனார்.  அடுத்து வந்த போப் மற்றும் ரூட் அதிரடியாக விளையாடினர்.  போப் 23 (21) ரன்னிலும் ரூட் 16 (10) ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

பேர்ஸ்டோவ் 26, பென் ஸ்டோக்ஸ் 11, சாக் கிராலி 76 என ஆட்டமிழந்தனர்.  இறுதியில் இங்கிலாந்து அணி 292 ரன்னில் ஆல் அவுட் ஆனது.  இதனால் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.  இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்திய தரப்பில் அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ந் தேதி தொடங்குகிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.