இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. ஆட்டமிழந்தார் ரோகித் சர்மா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காமில் நேற்று (ஆகஸ்ட் 4 ஆம் தேதி) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில், 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மாவும் கே.எல். ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 21 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 9 ரன்களுடனும் கே.எல்.ராகுல் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோகித் சர்மாவும் கே.எல்.ராகுலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, ராபின்சன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந் தார். அவர் 107 பந்தில் 36 ரன்கள் எடுத்திருந்தார். உணவு இடைவேளை வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் சேர்த்துள்ளது. கே.எல்.ராகுல் 48 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.