முக்கியச் செய்திகள் இந்தியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கடந்த சில நாட்களாக எல்லை தொடர்பான சச்சரவுகள் அதிகரித்திருந்தன. கால்வான் பள்ளதாக்கில் கடந்தாண்டு நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். 1962 போருக்ககு பின்னர் நடத்த பெரிய மோதலாக இது கருதப்படுகிறது.

இதனையடுத்து இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் நீடித்து வருகிறது. பதற்றத்தை குறைக்க இரு நாடுகளும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்புத்துறை சுமார் 5,000 தூரம் வரை கண்டம் விட்டு கண்டம் சென்று இலக்கை தாக்கும் அக்னி-5 நவீன ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (அக்.27) இரவு ஒடிசாவின் ஏபிஜே அப்துல்கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை மூன்றடுக்கு திட எரிபொருளுடன் இயங்கும் என்ஜின் மூலம் செயல்படுகிறது . இதன் மூலம் 5,000 கிமீ தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டுள்ளது.

முன்னதாக இந்த ஏவுகணையின் முதல் கட்ட சோதனை கடந்த 2012ல் நடந்தது. அக்னி 1-5 வரையிலான ஏவுகணைகளை மத்திய பாதுகாப்புத்துறை தயாரித்துள்ளது (DRDO). இதில் அக்னி 1-700கிமீ இலக்கையும், அக்னி2-2,000கிமீ இலக்கையும், அக்னி3,4 – 2,500 முதல் 3,500கிமீ வரை உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஜூன் மாத்தில் அணுசக்தி திறன் கொண்ட அக்னி ஏவுகணையை பரிசோதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

சட்டமன்றத்திற்கு பச்சை நிற முண்டாசு, பதாகைகளுடன் வந்த எம்.எல்.ஏ.க்கள்!

Nandhakumar

கொரோனாவால் மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 920பேர் உயிரிழப்பு!

Saravana Kumar

சிம்புவின் திரைப்படங்கள் திட்டமிட்டு முடக்கப்படுகிறது: டி.ராஜேந்தர்

Saravana Kumar