இந்தியாவில் புதிதாக 18,815 பேருக்கு கொரோனா – 38 பேர் பலி!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 18,930 பேருக்கு…

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 18,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று புதிதாக மேலும் 18,815 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4,35,72,468 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை  1,22,335 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் புதிதாக 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை5,25,343 ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து 15,899 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,29,37,876 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,98,51,77,962 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.