இந்தியாவில் 76% அதிகரித்த அந்நிய நேரடி முதலீடு

இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவாக 2021-22 நிதி ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 6 லட்சம் கோடிக்கும் அதிகமாக கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அந்நிய…

இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவாக 2021-22 நிதி ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 6 லட்சம் கோடிக்கும் அதிகமாக கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அந்நிய நேரடி முதலீடுகள் எனப்படுகின்றன.

ஒவ்வொரு நிதி ஆண்டிலும் இந்தியாவில் எவ்வளவு அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 2020-21ம் நிதி ஆண்டில் 89 ஆயிரத்து ரூ.766 ஆயிரம் கோடியாக இருந்த அந்நிய நேரடி முதலீடு, கடந்த 2021-22 நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 332 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 76 சதவீதம் அதிகம்.

அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அரசு மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்தங்களின் பலனாகவே அந்நிய நேரடி முதலீடு 76 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடுகள் விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, முக்கிய துறைகளில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீடு 100% அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தியாளர்களே தங்கள் பொருட்களை மொத்தமாகவோ சில்லறையாகவோ நேரடியாகவோ அல்லது ஆன்லைன் முறையிலோ அரசின் ஒப்புதல் இன்றி விற்க முடியும் எனும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதும் இதற்குக் காரணம் என அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.