தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்குகிறது : இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்குவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் அவரது 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்…

தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்து விளங்குவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் அவரது 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் நசிமா மரைக்காயர் தலைமை வகித்தார். ஜெய்னுலாவுதீன் முன்னிலை வகித்தார். சேக் சலீம் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் மற்றும் விஞ்ஞானி வெங்கடேஷ்வர் சர்மா மற்றும் சின்னத்துரை அப்துல்லா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பல்வேறு மாணவ, மாணவிகள் பி.எஸ்.எல்.வி. மற்றும் சந்திராயான் போன்ற ராக்கெட் மாதிரிகளை பார்வையிட்டனர். இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது,

“ஏ.பி.ஜே.அப்துல்கலாம் 92-வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவரது குடும்பத்துடன் உணவருந்தியது மகிழ்ச்சியாக உள்ளது. ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இந்தியாவின் கடைக்கோடி பகுதியில் இருந்து வந்து நாட்டின் உயர்ந்த நிலைக்கு வந்தவர். நானும் கேரளாவில் மின் வசதிகள் கூட இல்லாத இடத்தில் இருந்து வந்து உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளேன். இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது” இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.