ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாடுகள் பட்டியில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் 1 சதவிகித பணக்காரர்கள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளத்தில் 22%ஐ தங்கள் வசம் வைத்துள்ளனர் என அறிக்கை ஒன்று கூறுகிறது. ‘உலக சமத்துவமின்மை தரவுத்தளம்‘ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், “இந்தியா தற்போது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நாடாக பரிணமித்துள்ளது. நாட்டில் இளைஞர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2,04,200 ஆக உள்ளது. இதில் 50% மக்களின் ஆண்டு வருமானம் ரூ.53,610ஆக உள்ளது. ஆனால், வெறும் 10% பணக்காரர்களின் 50% மக்களின் வருமானத்தை விட 20 சதவிகிதம் அதிக வருமானத்தை பெருகின்றனர். அதாவது இந்த 10% பணக்காரர்களின் ஆண்டு வருமானம் ரூ.11,66,520 ஆக அதிகரித்துள்ளது.
1990களுக்கு பின்னர் இந்த ஏற்றத்தாழ்வுகள் மிகவும் கூர்மையடைந்துள்ளதாக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. இந்தியாவில் 1990களில் புதிய பொருளாதார கொள்கை அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 10% சதவிகித பணக்காரர்கள் இந்நாட்டின் ஒட்டுமொத்த சொத்துகளில் 57 சதவிகிதத்தை தங்களகத்தே கொண்டுள்ளனர். அதேபோல 1 சதவிகித பணக்காரர்கள் 22 சதவிகித சொத்துகளை கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பான்மையாக உள்ள 50 சதவிகித உழைக்கும் மக்கள் வெறும் 13 சதவிகித சொத்துகளை மட்டுமே கொண்டுள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் நாட்டில் ஏற்றதாழ்வுகள் எந்த அளவிற்கு கூர்மையடைந்துள்ளது என்பதை தெளிவாக விளக்குகிறது.

இந்தியா வறுமையிலும், ஏற்றத்தாழ்வுகளிலும் சிக்கி மூச்சடைத்து நிற்கிறது. ஆனால் எண்ணிக்கையில் குறைவாக உள்ள பணக்காரர்கள் மட்டும் தனித்து மிளிர்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த அறிக்கையின்படி இந்தியாவில் சராசரியாக குடும்ப சொத்து மதிப்பு ரூ.9,83,010 ஆக உள்ளது.
அதேபோல பாலின பாகுபாடுகளிலும் இந்தியா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. இந்தியாவில் பெண்களின் சராசரி ஆண்டு வருமானம் ஆசியாவின் ஒட்டு மொத்த சாரசரியை விட குறைவாகும். உலக அளவில் குறைந்த அளவில் ஊதியம் பெரும் பெண்கள் உள்ள நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களின் சாராசரியை விட இந்திய பெண்களின் சாராசரி சற்று அதிகம் அவ்வளவே.
உலகம் முழுவதும் அதிகம் ஊதியம் வழங்கும் நாடுகள் பெரும் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. உதாரணத்திற்கு அமெரிக்கா தங்கள் நாட்டின் குடிமக்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதாக கூறுகிறது. ஆனால் இந்நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமாக உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்தியாவில் 1990களில் புதிய பொருளாதார கொள்ளை அமல்படுத்தப்பட்ட பின்னர் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. நிறுவனங்களுக்க கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டன. இதன் காரணமாக சமூக பாதுகாப்பற்ற வேலைகள் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் பலர் கூறுகின்றனர்.










