அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல், வரும் 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நாளை மாலை 3 மணிக்கு நிறைவடைகிறது. இந்த மனுக்கள் 5ஆம் தேதி காலை பரிசீலிக்கப்படும் என்றும் அன்று மாலை 4 மணிவரை மனுவை திரும்ப பெறலாம் என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல், வரும் 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் முடிவு டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தமிழகத்தில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைகழக நிர்வாகிகள், பேரூராட்சி மற்றும் நகர வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல், டிசம்பர் 13 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 2 கட்டங்களாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








