முக்கியச் செய்திகள் விளையாட்டு

IND VS ENG; சதம் விளாசி அசத்திய ரோகித் சர்மா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசி டெஸ்ட் போட்டியில் வெளிநாட்டு மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதனால், 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி கடந்த 2ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸ்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 290 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், கே.எல்.ராகுல் 101 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்த நிலையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் ஜானி பேர்ஸ்டோவிடம் கேட் கொடுத்து பெவிலின் திரும்பினார். இதையடுத்து, களமிறங்கிய புஜாராவுடன் இணைந்து ரோகித் ஷர்மா அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்நிலையில், ரோகித் சர்மா 205 பந்துகளுக்கு தனது சதத்தை பதிவு செய்தார். இது வெளிநாட்டு மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் முதல் சதமாகும்.

Advertisement:
SHARE

Related posts

”புத்த இலக்கியங்கள் அடங்கிய நூலகம் அமைக்கப்பட வேண்டும்”- பிரதமர் மோடி!

Jayapriya

ஆர்யன் கானுக்கு ஆசையாக அம்மா அனுப்பிய டிபன்: திருப்பி அனுப்பிய சிறை அதிகாரிகள்

Halley karthi

பெங்களூரு அணியை வீழ்த்துமா கொல்கத்தா?

Saravana Kumar