IND vs AUS | 4வது டெஸ்ட் போட்டி – இந்தியா அதிர்ச்சி தோல்வி.!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில், இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியா உள்ள இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின், மூன்றாவது இன்னிங்ஸ்…

IND vs AUS 4th Test match- India lost..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில், இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியா உள்ள இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின், மூன்றாவது இன்னிங்ஸ் துவக்கத்தில், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்தது. ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் லபுஷேன் 70 (139) ரன்களை எடுத்து அசத்தினார். மேலும், நாதன் லைனின் 41 (90) ரன்களும் மிக முக்கியமானதாக மாறியது.

இந்த, இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 100+ ரன்கள் முன்னிலை வகித்ததாலும், இந்திய அணிக்கு, 340 ரன்களை, ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயம் செய்தது. இந்த, மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் ஓபனர் யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 84 (208) எடுத்தார். மேலும், ரிஷப் பந்த் 30 (104) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் இரட்டை இலக்க ரன்களைக் கூட தொடவில்லை. இறுதியில், இந்திய அணி 155/10 ரன்களை மட்டும் சேர்த்தது. இதன் மூலம் 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

இப்போட்டியில் இந்தியா தோல்வியைச் சந்தித்தன் மூலம் ஆஸி. அணி 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.