ABVP அமைப்பினர் முற்றுகை! டெல்லி பொதிகை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு!

டெல்லியில் ABVP அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதால் பொதிகை தமிழ்நாடு இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த…

Delhi | ABVP organizations are under siege! Security for the package house!

டெல்லியில் ABVP அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதால் பொதிகை தமிழ்நாடு இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் இன்று விசாரணையை தொடங்கி உள்ளது.

இதை தொடர்ந்து அண்ணா பல்கலை. மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்தும், மேலும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு பாதுகாக்கிறது எனவும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தலைமையில் டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் தமிழ்நாடு பொதிகைஇல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.