அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம் – ஆபத்தை எதிர்கொள்ளும் சமூக வலைதள பயனாளர்கள்..!

அதிகரிக்கும் ரீல்ஸ் மோகத்தால் சமூக வலைதள பயனர்கள் பலர் ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதுகுறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. மொபைல் போன் இல்லாத பகுதி எங்கேனும் உண்டா .. தேடி சொல்லுங்களேன் எனக்…

அதிகரிக்கும் ரீல்ஸ் மோகத்தால் சமூக வலைதள பயனர்கள் பலர் ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதுகுறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.

மொபைல் போன் இல்லாத பகுதி எங்கேனும் உண்டா .. தேடி சொல்லுங்களேன் எனக் கேட்டால் சட்டென இல்லவே இல்லை என சொல்லும் அளவுக்கு மொபைல் போன் பயன்படுத்துவோரின் அதிகரித்துள்ளது. உலகிலேயே அதிக மொபைல் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

அதிக மொபைல் போன் நுகர்வினால் எந்த புதிய தொழில்நுட்பம் சந்தைக்கு வந்தாலும் அதனை உடனே பயன்படுத்தி ஆனந்தமடைவதில் இந்தியர்கள் முன்னணியில் உள்ளனர். வெறுமனே தகவல் தொடர்பு சாதனமாக அறிமுகமான மொபைல் போன் இன்று படம் எடுப்பது முதல் பல் விளக்குவதை வீடியோ எடுப்பது வரை, உணவினை ஆர்டர் செய்வது முதல் உடற்பயிற்சி செயலி வரை, பணம் எடுப்பது முதல் பள்ளிப் பாடங்களை கற்பது இன்று மொபைல் போன் இல்லாமல் உலகம் இயங்குவதே இல்லை.

உலகம் எதிர்கொண்ட மிக முக்கியமான பேரிடரான கொரோனா தொற்றின் போது, ஊரடங்கில் குழந்தைகளின் கல்வியில் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியை சமாளிக்க அரசும் , பள்ளிகளுமே வேறு வழியின்றி சிறுவர்களின் கையில் மொபைலை திணித்தனர்.

பொதுவாகவே ஒரு புதிய தொழில்நுட்பம் சந்தைக்கு வரும்போது அது கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் சரியானதாக இருப்பினும் அதற்கு எதிர்மறையான சில பாதிப்புகளையும் துரதிர்ஷ்டவசமாக அது ஏற்படுத்தவே செய்யும். அந்த வகையில் மொபைல் போனும் சில பாதிப்புகளின் ஏற்படுத்தவே செய்துள்ளது.

இணைய உலகில் நாம் இருக்கிறோம் என்ற சொல் புலக்கத்திலிருந்து அகன்று தற்போது நாம் இன்ஸ்டா உலகத்தில் இருக்கிறோம் என்ற சொல் வழக்கத்திற்கு வந்துள்ள அளவுக்கு, இன்ஸ்டா போஸ்டுகளும் இன்ஸ்டா ரீல்ஸ்களும்  தற்போது பிரபலமடைந்துள்ளன.

ஆனால் இதன் மூலம் சமூக வலைதள பயனர்கள் ரீல்ஸ் மோகத்தில் எந்த எல்லைக்கும் செல்லும் நிலைக்கு சென்றுள்ளனர். சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவ்மோக பகுதியில் உள்ள அரிசிணகுடி அருவிக்கு வனத்துறை அறிவுறுத்தலை மீறி சென்றுள்ளார்.

அங்கே ஆர்பரிக்கும் அருவிக்கு முன் நின்று ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கால் இடறி தவறி விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இந்த வீடியோ வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்தது.

இந்த நிலையில் உயரமான கட்டடங்களில் ஏறி சாகசம் செய்யும் இளைஞர் ஒருவர்  சீனாவின் உயரமான கட்டடத்திலிருந்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது.

மிக உயரமான கட்டடங்கள் மீது ஏறி சாகசங்களில்  முயற்சியில் ஈடுபடுபவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெமி லூசிடி. இவர் சிறுவயது முதலே கட்டடங்கள் மீது ஏறி சாகசம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.

தற்போது ரெமிக்கு 30 வயதாகிறது.  பல உயரமான கட்டடங்கள் மீது ஏறி சாதனை படைத்துள்ள இவர் அதன் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்து வருவது வழக்கம்.  இந்த நிலையில் கடந்த வாரம், இவர் சீனாவின் ஹாங்காங்கில் உள்ள டிரெகன்டர் கோபுரத்தின் மீது ஏற முயன்றுள்ளார். அந்த கட்டடத்தின் 68வது மாடியிலிருந்தவாறு புகைப்படம் எடுக்கும்போது கால்தவறி கீழே விழுந்துள்ளார்.

அவர் கட்டடத்தின் மீது ஏறாமல், மின்தூக்கி வழியாக 68வது மாடிக்கு வந்து சில ஆபத்தான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. ரெமி தவறி விழுந்ததைப் பார்த்த அக்கட்டத்தின் பணிப்பெண் அளித்த தகவலின்பேரில் உடனடியாக ரெமியை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.  எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இதைபோன்று பல சமூகவலைதள பயனர்கள் ரீல்ஸ் மோகத்தால் தங்களது வாழ்க்கையையே தொலைக்கும் அபாய நிலை ஏற்ப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் பல நல்ல வழிகளில் உதவினாலும் பயன்படுத்துவோர் அதனை ஆபத்தான கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே பெரிய விபரீதத்திற்கு வழிவகை செய்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.