- சினிமாவில் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ நடிகராக வேண்டும் என்றால், இன்ஸ்டாகிராம் ரீல்சில் அதிக லைக்குகளை அள்ளும் FAMOUSஆன ஆளாக இருந்தாலே போதும். ஏனெனில் DIGITAL துறை அந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது. ஆனால், முன்பெல்லாம் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அனைத்து PRODUCTION கம்பெனிக்கும் ஏறி இறங்க வேண்டும். அப்படி அலைந்தால் தான், ஏதாவது ஒரு சிறிய காட்சியில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு இருக்கும் சூழலில், முதல் வாய்ப்பாகவே ஒரு சீரியலில் கதாநாயகி வேடம் கிடைப்பது எல்லாம் மிகவும் அறிது. அந்த நடிகை தான், நம்மில் பலராலும் சீதா மகாலட்சுமியாக அறியப்படும் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர்.
1992-ம் ஆண்டு உதய்சிங், வந்தனா தம்பதியினருக்கு இரண்டாவது மகளாக பிறந்தவர் தான் மிருணாள் தாகூர். இவர், மகாராஷ்டிராவின் பிரபலமான கல்லூரியில் படிக்கும்போது தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. உடனே தனது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறினார். 2012 – 2013ம் ஆண்டு வரை, ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் எனும் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். SPORTSஇல் ஆர்வம் உள்ள மிருணாள் தாகூர், M TVயின், Box Cricket Leagueஇல் MUMBAI WARRIOR அணி சார்பாக களம் கண்டார்.
இதற்கிடையே பல்வேறு சீரியல்களில் நடித்த இவர், தனது தொலைக்காட்சி பயணத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, தமிழில் ஹிட்டான ”நாகினி” சீரியலின் இந்தோனேசிய வெர்சனான ”நாகின்” சீரியலில் நடித்தார். சீரியலே பார்க்காத பலரும், நாகின் சீரியலில் மிருணாள் தாகூர் நடிப்பை பார்த்தது முதல் அந்த சீரியலுக்கு ரசிகர்களாகினர்.
2014 வரை மராட்டிய திரைப்படங்களில் சைடு ரோல்களில் நடித்த இவர், முதன்முதலாக ஹிந்தி திரைப்படமான ”LOVE SONIA”வில் நடிக்க ஒப்பந்தமாகி கொல்கத்தாவில், பாலியல் தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் தங்கி, அவர்களது தினசரி வாழ்க்கையை தன்னுள் வாங்கி நடித்தார். பல்வேறு பிரச்னைகளுக்கு பின்னர் 2018ம் ஆண்டு அந்த திரைப்படம் வெளியானது. வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவிட்டாலும், இந்த படம் பாலியல் தொழிலாளர்கள் மீது மக்கள் மத்தியில் ஒரு தெளிவை கொடுத்தது.
பின்னர் பல வெற்றி படங்களில் நடித்த மிருணாள் தாகூரை, 2022ஆம் ஆண்டு தமிழில் டப் செய்து வெளியான சீதா ராமம் திரைப்படம், தமிழ் ரசிகர்களுக்கு அவரை யார் என்று தெரிய வைத்தது. இந்த படத்தின் மூலம் இளைஞர்கள் பலருக்கும் பிடித்தமான நடிகையாகவும் மாறிப்போனார். சீதா ராமம் படத்தில் மிருணாள் தாகூரின் ஒவ்வொரு வசனமும், அசைவும், உணர்வகளின் வெளிப்பாடும் ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்தன. சீதா ராமம் வெளியான சமயத்தில் இவரை வைத்து மீம்ஸ்களை தெறிக்கவிட்ட நெட்டிஸன்கள், பாராட்டு மழையும் பொழிந்தனர், இத்தனைக்கும் அந்த படம் தமிழில் நேரடியாக வெளியாகவில்லை. இவ்வாறு, ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை மிருணாள் தாகூர், தனது திரைப்பயணத்தில் மென்மேலும் வளர வாழ்த்துவோம்.
-ஆண்ட்ரு







