முக்கியச் செய்திகள் தமிழகம்

ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டணம் உயர்வு

சென்னை சென்ட்ரல் உட்பட 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில்
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 2023ம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைமேடை கட்டணம் பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ச்சியாக வருகை தரவுள்ளன. இந்த பண்டிகைக் காலங்களில் ரயில் நிலைய நடைமேடைகளில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களை முன்னிட்டு நடைமேடைக் கட்டண உயர்வு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வரும் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேள்விக் குறியான பழங்குடியின, பட்டியலின மாணவர்களின் பள்ளிப்படிப்பு: மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Vandhana

மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு… ஏன் தெரியுமா?…

Web Editor

முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு – பாஜக மாநில தலைவர் அறிக்கை

Web Editor