முக்கியச் செய்திகள் தமிழகம்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு; 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 12 மாவட்ட காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடி உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன்படி இன்று (13/10/22) 11, 30 மணியளவில் மேட்டூர் அணையிலிருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையிலிருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் எந்த நேரத்தில் திறக்கப்படலாம் என அணை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் காவிரி கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிப்பு விடப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் உடைமைக்கும் உயிருக்கும் இழப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அனைத்துத் துறை அரசு அதிகாரிகளையும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஸ்டேன் சாமி உயிரிழப்பு; மத்திய அரசைக் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

Halley Karthik

3வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் இல்லை; அமைச்சர்

G SaravanaKumar