முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரேசில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை

பிரேசிலில் நடைபெற்ற செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். 

பிரேசிலில் நடைபெற்ற 24வது கோடைகால செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜெ.அனிகா மற்றும் பிரித்வி சேகர் ஆகியோர் பங்கேற்றனர். ஜெ.அனிகா இறகு பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் குழுப்போட்டி ஆகியவற்றில் பங்கேற்று 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை ஊக்கத்தொகையாக வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த பிரித்வி சேகர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் 2 வெண்கலப்பதக்கமும் என 3 பதக்கங்கள் வென்றுள்ளனர். அவருக்கு ரூ.35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், பிரேசில் நாட்டில் நடைபெற்ற 24-வது கோடைகால செவித்திறன் சவால் உடையோருக்கான ஒலிம்பிக் போட்டி 2022-ல் பதக்கங்களை வென்ற ஜெ. ஜெர்லின் அனிகா மற்றும் பிரித்வி சேகர் ஆகியோருக்கு ஊக்கத் தொகையாக ரூ.1.10 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.

செஸ் ஒலிம்பியா போட்டிக்கான வேலைகள் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 15க்குள் அனைத்து பணிகளும் நிறைவேறும். மஞ்சப்பை வெல்டிங் மெஷின் துவக்கம் கூடிய விரைவில் அதிகமாக நடைபெறும்.

மஞ்சப்பையை விற்கும் நபர்கள் இந்த மிஷினை கொண்டு தங்களுடைய மஞ்சப்பை விற்பனையை செய்து கொள்ளலாம். பணம் செலுத்தினால் மஞ்சப்பை கொடுக்கும் திட்டம் நாளை தொடக்கி வைக்கப்பட உள்ளது. விரைவில் பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் இந்த திட்டம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“வார்னருக்கு எதிரான கேப்டன்ஷிப் தடையை நீக்க ஆலோசனை”

Web Editor

“திரெளபதி முர்மு எனது உண்மையான பெயர் அல்ல”

Mohan Dass

கலையும் அரசியலும் சந்திக்கும் வண்ணக் கோடுகளின் அடையாளம் ஓவியர் ரவி பேலெட்

EZHILARASAN D