கலைஞர் கோட்டம் திறப்பு: இன்று மாலை திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை திருவாரூர் செல்கிறார். திருவாரூர் மாவட்டம், காட்டூரில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7 ஆயிரம் சதுர…

திருவாரூர் அருகே காட்டூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை திருவாரூர் செல்கிறார்.

திருவாரூர் மாவட்டம், காட்டூரில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதில் அருங் காட்சியகம், திருமண மண்டபம், முத்துவேலர் நூலகம், கருணா நிதியின் உருவச் சிலை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி கோட்டத்தை, ஜூன் 20-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்த, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்.

முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார். இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து திருவாரூர் செல்கிறார். இரண்டு நாட்கள் அங்கு தங்கும் அவர் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு செவ்வாய்க்கிழமை மாலை கருணாநிதி கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்கிறார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.