அரிக்கொம்பன் யானைக்கு 2 லட்சம் ரூபாய் செலவில் சிலை வைத்துள்ள கேரள விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த வாரம் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கடும் சிரமத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்பாக அகத்தியர் மலை கோதையாறு பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர், களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிகொம்பன் ஆரோக்கியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அரிக்கொம்பன் யானைக்கு 2 லட்சம் ரூபாய் செலவில் சிலை வைத்துள்ள கேரள விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன. கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்த பாபு என்ற விவசாயி, சின்னக்கானல் பகுதியில் இஞ்சியை பயிரிட்டுள்ளார்.
அப்போது, அங்கு உலா வந்த அரிக்கொம்பன் யானை நிலத்தை சேதப்படுத்தி உள்ளது. முதலில் மனமுடைந்த பாபு, மீண்டும் அவ்விடத்தில் இஞ்சி விவசாயத்தை மேற்கொண்டபோது நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. இதனால், அரிக்கொம்பன் யானையை குலதெய்வமாக வழிப்பட்டு வந்த பாபு, யானைக்கு சிலை வைத்துள்ளார்.







