







90களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், பிரசாந்த், சூர்யா, விக்ரம் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த பெருமையை பெற்றிருக்கிறார். கடந்த வருடம் மட்டும் சிம்ரன் நடிப்பில் மகான், ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட், கேப்டன் என மூன்று படங்கள் வெளியாகியிருந்தது. சினிமா வாய்ப்புகள் குறைந்த பின்னர், நடிகை சிம்ரன் ஒரு பெரிய நட்சத்திர ரெஸ்ட்டாரன்டை நடத்தி வருகிறார்.
நெப்போலியன்:
நெப்போலியன் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். ஏகப்பட்ட படங்கள் நடித்து பிரபலமான நெப்போலியன் அரசியலிலும் ஈடுபட்டு அமைச்சராக இருந்தவர். அதைத் தாண்டி சொந்தமாக ஜீவன் என்ற மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்.
நிக்கி கல்ராணி:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கோ-2 , கலகலப்பு-2, சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பரீட்சையமான முகமாக மாறியவர் நடிகை நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் சேர்ந்து 2 படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளனர். நிக்கி கல்ராணி, சினிமாவை தவிர்த்து சொந்தமாக ஒரு “கஃபே ஷாப்” வைத்துள்ளார்.