கொரோனா மூன்றாவது அலையை தடுக்க ஆண்டிபட்டி அருகே கொரோனா கோயிலை உருவாக்கும் முயற்சியில் 90 வயது முதியவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டி, கோவை இருகூர் பகுதியில் கடந்த ஆண்டுகள், கொரோனா தேவி சிலையை நிறுவி வழிபாடுகளை மேற்கொண்ட சம்பவம், மக்களின் கவனத்தை பெற்றது.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 90 வயது ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் ராஜரத்தினம் என்பவர், தனது விவசாய தோட்டத்தில் கொரோனா கோயில் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக கோயிலுக்கான பெயர் பலகையை வைத்துள்ள அவர், விரைவில் கோயில் கட்டும்பணியை தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.







