மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும், இந்திய மருத்துவர்கள் நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவை போற்றும் வகையில் ஜூலை 1-ம் நாள், இந்திய மருத்துவர்கள் நாள் கடைபிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்களின் சேவை இன்றியமையாதாக இருப்பதாகவும், அதனை உணர்ந்து மருத்துவர்கள் ராணுவம் போல மருத்துவர்கள் அல்லும் பகலும் அரும்பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலை தீவிரமாக இருந்தபோது திமுக ஆட்சிக்கு வந்ததாகவும், அப்போது, அரசு மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளில் தளகர்த்தர்களாக, சிப்பாய்களாக, முன்கள வீரர்களாக பணியாற்றி மருத்துவர்கள் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, இந்த நன்னாளில் மருத்துவர்களுக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்கொள்வதாக அவர் கூறியுள்ளார். மேலும், இது மக்களின் அரசு என்றும் மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்களுக்கான அரசாகவும் இருக்கும் என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், அதன் அடையாளமாகவே, கொரோனா தடுப்புப் பணியில் இன்னுயிரை ஈந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவியாக 25 லட்சம் ரூபாயும், பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக 30 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.