கொரோனாவுக்கு எதிரான போரில், அனைத்து மருத்துவர்களின் பணியால் இந்தியா பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற மருத்துவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான பிதன் சந்திரராயின் நினைவை போற்றும் வகையில், ஜூலை 1-ம் நாள் தேசிய மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பிதன் சந்திர ராய், பிறந்த தினமும், மறைந்த தினமும் ஜூலை 1-ம் தேதி ஆகும். மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, மருத்துவர்களிடையே இன்று பேச உள்ளார்.
இதுதொடர்பாக, தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனாவுக்கு எதிரான போரில், அனைத்து மருத்துவர்களின் பணியால் இந்தியா பெருமைப்படுவதாக தெரித்துள்ளார். ஜூலை 1-ம் நாள் தேசிய மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுவதாகவும், இன்று மாலை 3 மணிக்கு இந்திய மருத்துவ கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், மருத்துவர் சமூகத்துடன் தாம் பேச உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.







