அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை -வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை,  நாகப்பட்டினம்,  சிவகங்கை, மதுரை,  விருதுநகர்,  ராமநாதபுரம்,  பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  தஞ்சாவூர்,  திருவாரூர்,  புதுக்கோட்டை,  திருவள்ளூர்,  ராணிப்பேட்டை,  சென்னை, காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை,  செங்கல்பட்டு,  விழுப்புரம்,  கடலூர்,  தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.