முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழை நேசிக்கும் தமிழர்கள் உள்ள தமிழ் நாட்டில் மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் -நிர்மலா சீதாராமன்

தமிழை நேசிக்கும் தமிழர்கள் உள்ள தமிழ் நாட்டில் மருத்துவ கல்வியை தமிழில்
வழங்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் 35 வது பட்டமளிப்பு விழா இன்று
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சி மேடையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி.மருத்துவ துறையில் ஆயிரக்கணக்கான பட்டங்கள் இன்று வழங்கப்படுகிறது. இது மிகப்பெரிய சாதனையாகும் என்றார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவ துறையின் பணி மிகச்சிறப்பானது.பிரதமரின்
முயற்சியால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. மருத்துவ கல்வியும்,மருத்துவ துறையும் இந்தியாவில் வளர்ச்சி அடைந்துள்ளது. சீனா, ஜப்பான் நாடுகளை விட தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.இந்திய அரசு அறிவியல் பூர்வமாக சமூக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முயற்சி செய்துவருகிறது என்றார்.


சித்தா, ஆயுர்வேதா, யுனானி, அலோபதி என எந்த துறை வேண்டுமானாலும் பயின்று
மக்களுக்கு சேவை செய்யலாம். சித்த மருத்துவம் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது. கபசுர குடிநீர் கோவிட் தடுப்பில் சிறப்பாக செயல்பட்டது. சர்வதேச அளவில் 24.6 பில்லியன் அமெரிக்க டாலர் மருந்து பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது எனவும் 60 சதவீத தடுப்பூசி உலக அளவில் இந்தியாவில் கிடைக்கிறது எனவும் பேசினார்.

மேலும் உலக அளவில் மருத்துவ பொருட்கள் உற்பத்தியின் மையமாக இந்தியா திகழ்கிறது என்ற அவர், மருத்துவ துறையில் தமிழ்மொழியில் கல்வி வழங்க வேண்டும் எனவும் தமிழை நேசிக்கும் தமிழர்கள் உள்ள தமிழ் நாட்டில் மருத்துவ கல்வியை தமிழில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் நின்று ,தமிழக மருத்துவ அமைச்சர் முன் நின்று கூறுகிறேன்.தமிழ் நாட்டில் மருத்துவ கல்வியை தமிழில் கொண்டுவர வேண்டும் எனவும் தாய்மொழியில் கல்வி கற்றால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் என்றார்.

ஆராய்ச்சிக்கும், உயர்கல்விக்கும் தாய் மொழியில் கல்வி கற்பதுதான் சிறந்த வழி
என்றார். மருத்துவ துறையில் இருக்கும் ஒவ்வொரு கல்வியும் தமிழை ஆதாரமாக வைத்து கற்பிக்க வேண்டும். மருத்துவக் கல்வி தமிழில் இருக்க வேண்டும். மருத்துவக் கல்வியுடன் தொடர்புடைய அனைத்து கல்வியும் தமிழில் இருந்தால் நல்லது. தாய்மொழியில் பலம் இருந்தால் மற்ற எந்த மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம் என்றார்.

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் கோவிட் க்கு குறைந்த செலவில்
மருத்துவம் பார்க்கப்பட்டது.ஆனால் நாடு முழுவதும் உள்ள சில மருத்துவமனைகள்
கட்ட முடியாத அளவிற்கு பணம் வசூல் செய்தது வருத்தமளிக்கிறது. உயிர் போகும் நிலையில் கூட ஒரு சில மருத்துவமனைகள் வசூலில் ஈடு பட்டது வருத்ததிற்குரியது என்றார்.

மருத்துவ துறையில் பட்டம் பெரும் மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவமனைகள்
கட்டி மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுரையும் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி – அதிரடி நடவடிக்கை

Janani

சென்னை மாநகராட்சி: மேயராக பதவியேற்றார் பிரியா ராஜன்

Arivazhagan Chinnasamy

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா-ஓடிடி நிறுவனங்களுக்கு அழைப்பு

Web Editor