லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து சீனா நாட்டு வீரர்கள் தற்போது திரும்பப்பெறப்பட்டுள்ளனர். அதற்கான வீடியோக்கள் வெளிவந்துள்ளது.
இந்திய-சீன எல்லையில் சமீப காலமாக இரு நாட்டு ராணுவமும் தன் படைகளை குவித்து வந்திருந்தது. கடந்த ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய தரப்பிலிருந்து 20 வீரர்கள் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன் ஒரு பகுதியாக பாங்காங் எல்லையில் சீன ராணுவம் தன் ராணுவ படைகளையும், முகாம்களையும், பீரங்கிகளையும் திரும்பப்பெற்று வருகிறது. அதன் புகைப்படங்களும், காணொளிகளும் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் முழுவதுமாக திரும்பப்பெற்ற பிறகு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.