லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் பலியாகியிருப்பதாகவும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தங்கள் முகாமுக்கு வாகனங்களில் திரும்புவதும் மீண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இடங்களுக்கு வாகனங்களில் செல்வதும் வழக்கம். ஆபத்தான மலைப்பாதைகளை கொண்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் மிகவும் சவாலன தட்பவெப்ப நிலையையும் பொருட்படுத்தாது தேசத்தை காக்கும் பணியில் ராணுவ வீரரக்ள் ஈடுபட்டுள்ளனர்.
லடாக்கை பொறுத்தவரை சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதால் எப்போதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். இந்த நிலையில், லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் பலியாகியிருப்பதாகவும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
லடாக்கின் லே பகுதியில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள கியாரி பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. விபத்துக்குள்ளான வாகனத்தில் 10 வீரர்கள் பயணம் செய்ததாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. முழு வீச்சில் மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.







