அதிமுக மாநாட்டை முன்னிட்டு மதுரை சென்ற எடப்பாடி பழனிசாமி! தொண்டர்கள் மேள, தாளத்துடன் உற்சாக வரவேற்பு!

அதிமுக மாநாட்டை முன்னிட்டு மதுரை சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு மேள, தாளம் மற்றும் கரகாட்டம், ஒயிலாட்டம் என கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரையில் அ.தி.மு.க. சார்பில் மாநாடு நாளை…

அதிமுக மாநாட்டை முன்னிட்டு மதுரை சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு மேள, தாளம் மற்றும் கரகாட்டம், ஒயிலாட்டம் என கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரையில் அ.தி.மு.க. சார்பில் மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருக்கிறார்.இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் இரவு-பகலாக நடந்தது. மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள், நிர்வாகிகள் பஸ், கார் உள்ளிட்டவற்றில் மதுரைக்கு பயணித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில்நாளை நடக்கவிருக்கும் அதிமுக மாநாட்டிற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை சென்றடைந்தார். மதுரை சென்ற அவருக்கு தொண்டர்கள் மேள, தாளத்துடனும் கரகாட்டம், ஒயிலாட்டம் என கிராமிய கலை நிகழ்ச்சிகளுடனும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு மீனாட்சியம்மன், கள்ளழகர், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பட்டர்கள் பிரசாதங்கள் வழங்கினார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.