60 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி…

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 1 கோடியே 37 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்ட தகுதியானவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.