இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,293 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,60,960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை கோரதாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,60,960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை கோரதாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக பலரும் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர். மேலும ஆக்சிஜன் பற்றாகுறையை நீக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் நடவடிக்கையாக சில மாநிலங்களில் இரவு ஊரடங்கும் , முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.79 கோடியாக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தொற்று பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 2.01 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் பேர் தொற்றிலிருந்து 2,61,162 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை 14.78 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1.48 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு 29,78,709 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில், தற்போது நாடில் ஆக்சிஜன் பற்றாகுறையால் பல கொரோனா நோயாளிகள் உயிரிழக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.