தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் தொடங்குவதை முன்னிட்டு கடைகள்
அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் சீசன் ஆண்றுதோறும் 2 முறை களை கட்டுவது வழக்கம். குறிப்பாக, ஜூன்
முதல் ஆகஸ்ட் வரை மழைக்காலமும், நவம்பர் முதல் ஜனவரி வரை ஐய்யப்ப
சுவாமி காலமும் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இன்னும் சில
தினங்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறிகள் தென்காசி மாவட்டத்தில்
அவ்வப்போது தென்பட்டு வருகிறது. மேலும், இந்த வருடமும் கடந்த வருடத்தை
போல செழிப்பாக இருக்கும் என கூறப்படும் சூழலில், இந்த மாதிரியான காலங்களை
மட்டும் நம்பி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாழ்ந்து வரும் நிலையில், மழை
காலங்கள் தொடங்குவதற்கு முன்னதாகவே, குற்றாலம் பகுதிகளில் வியாபாரிகள்
தற்காலிக கடைகள் அமைக்கும் பணிகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகின்றன.
—-கு.பாலமுருகன்







