“மக்களுக்காக நான் யார வேணும்னாலும் இழப்பேன்” – மாஸ் காட்டும் #BhairathiRanagal பட டிரெய்லர்!

கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ள ‘பைரதி ரணகல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நர்த்தன் இயக்கத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘பைரதி ரணகல்’. இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஸ்ரீ முரளி,…

கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ள ‘பைரதி ரணகல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நர்த்தன் இயக்கத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ள திரைப்படம் ‘பைரதி ரணகல்’. இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஸ்ரீ முரளி, ராகுல் போஸ், தேவராஜ், அவினாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கீதா பிக்சர்ஸ் சார்பில் கீதா சிவராஜ்குமார் தயாரித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘முப்தி’ படத்தின் தொடர்ச்சியில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட படங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதையும் படியுங்கள் : “AR Rahman மீது அவதூறு பரப்பாதீர்கள்… அவர் தலைசிறந்த மனிதர்” – விவாகரத்து குறித்து சாய்ரா பானு விளக்கம்!

இந்த திரைப்படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. இப்படம் வரும் 29ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 2 நிமிடம் மற்றும் 31 வினாடிகள் கொண்டுள்ள இப்படத்தின் டிரெய்லரில் சிவராஜ்குமார் வழக்கறிஞராகவும், கேங்க்ஸ்டராகவும் நடித்துள்ளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.