முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊரடங்கில் உயரும் பெட்ரோல்:சென்னையில் சதம் அடிக்க உள்ளது

நாடு முழுவதும் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துவருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் சதம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக்கூடாது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய். 97. 43 காசுகளுக்கும் ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 91. 64 காசுகளுக்கும் விற்பனைச் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துவருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரூ.100-க்கு விற்பனை

சில வருடங்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டின் விலைக்கும் இடையே 20 ரூபாய்க்கு மேல் வித்தியாசம் இருந்தது. ஆனால் தற்போது, டீசல் விலையும் சற்றேறக்குறைய பெட்ரோல் விலைக்கு இணையாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 100- ஐ தாண்டிய விற்பனைச் செய்யப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுவந்தது.

2017-ம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைச் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்காரணமாக நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல விலை 10 காசுகள், 20 காசுகள் என எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்ததன் விளைவாக, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய். 100-ஐ எட்டியுள்ளது.

கண்ணுக்கு தெரியாமல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் சிலிண்டரின் விலை ரூ.825-க்கு விற்பனைச் செய்யப்படுகிறது.

மற்றொரு சுமை கல்

கொரோனா நோய்த் தொற்று காலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டுக்கான நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -7.3 % சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு முந்தைய நிதியாண்டில் (2019-2020) ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 4.2 % என்ற மிகக் குறைவான நிலைக்குச் சென்றது. 2018-ம் ஆண்டு 8.2 % என்ற நிலையிலிருந்தது.

இதுபோன்ற சூழ்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பால், காய்கறி மற்றும் மளிகை போன்ற அன்றாட செலவுகளுக்கே போதிய வருமானம் இல்லாத நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மட்டும் ரூ.100 செலவுச் செய்வது மக்களின் தலையில் மற்றொரு சுமை கல்லை உயர்த்தி உள்ளது.

6 மாதங்களுக்கு உயர்த்தகூடாது

பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேசிய தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர் சங்கத்தின் மாநில தலைவர் கே.பி. முரளி நியூஸ் 7 தமிழ் இணைய பிரிவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது“கொரோனா நோய்த் தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் மக்களின் நிலையை கருத்தில்கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் தற்காலிகமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவதை நிறுத்தவேண்டும்.

இதுபோன்ற பேரிடர் காலத்தில்கூட எண்ணெய் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். மக்களிடம் பணம் இருந்தால்தானே பெட்ரோல் வாங்க வருவார்கள். இதேபோன்ற நிலைதான் பெட்ரோல் விற்பனையாளர்கள் மத்தியிலும் நிலவுகிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதால் எங்களாலும் பொருட்களை வாங்கி விற்பனைச் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் விற்பனையாளர்களுக்கும் எண்ணெய் நிறுவனங்கள் வழங்கவேண்டிய செலவினைத் தொகையும் கடந்த 2017-ம் ஆண்டு பிறகு உயர்த்தப்படாமல் உள்ளது. ஆனால் தொடர்ச்சியாக பெட்ரோல் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் குறைந்தது 6 மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதை நிறுத்தவேண்டும்” என்கிறார் அவர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Arivazhagan Chinnasamy

வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி

சென்னை புத்தகக் காட்சியில், முகக்கவசத்தோடு கையுறையை கட்டாயமாக்குக!

Arivazhagan Chinnasamy