இந்த நிலை நீடித்தால் இலங்கையைப் போல் இந்தியா பலவீனமடையும்-ப.சிதம்பரம் எச்சரிக்கை

“இந்தியாவில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய இரண்டு கொடிகள் தான் உயர பறந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடிகளை தான் பிரதமர் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால் ஏறத்தாழ இலங்கையைப் போல் இந்தியா பலவீனமடையும்”…

“இந்தியாவில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய இரண்டு கொடிகள் தான் உயர பறந்து
கொண்டிருக்கிறது. இந்தக் கொடிகளை தான் பிரதமர் அண்ணாந்து பார்த்துக்
கொண்டிருக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால் ஏறத்தாழ இலங்கையைப் போல் இந்தியா பலவீனமடையும்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரம் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ப.சிதம்பரம் மணமக்களை வாழ்த்தி விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா தற்போது மதம், மொழி, இனம், சாதி, வடநாடு, தென்னாடு என பிரிந்து கிடக்கிறது. இத்தகைய சூழலைத்தான் ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். எனவே நாமெல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் என்பதையும், இதனை ஒற்றுமைப்படுத்த காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் ஒற்றுமையை உருவாக்கும் நோக்கில் கன்னியாகுமரியில் இருந்து நாடு முழுவதும் நடைபயணம் தொடங்கி உள்ளது.

இந்தப் பயணத்தை விமர்சிப்பவர்கள் காந்தியடிகளால் மேற்கொள்ளப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காதவர்கள். இந்த இயக்கத்தை விமர்சிப்பவர்கள் நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள். நாட்டில் 2 கொடிகள் தான் மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது.

ஒன்று வேலையில்லா திண்டாட்டம், மற்றொன்று பண வீக்கம். இந்த இரண்டையும் சரி செய்ய முடியாமல் ஆட்சியாளர்கள் தவித்து வருகின்றனர். இந்த 2 கொடிகளை தான் பாரதப் பிரதமரும் நிதி அமைச்சரும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவில் இலங்கையை போல் நிலைமை வராது என்றாலும், பணவீக்கமும் வேலையின்மையும் தொடர்ந்தால் இலங்கை போல் நிலைமை பலவீனமடையும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகரிக்கவில்லை. அதற்கான புள்ளி விவரமும் இல்லை. ஆனால் குற்றங்கள் நடைபெறுகிறது. எனவே போற போக்கில் இது
போன்ற விமர்சனங்கள் வருவது எல்லாம் கணக்கில் கொள்ளக்கூடாது என்றார் ப.சிதம்பரம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.