இரட்டை எஞ்சின் ஆட்சியிருந்தால் விரிவான முன்னேற்றம் பெற முடியும்- பிரதமர் மோடி

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே விரிவான முன்னேற்ற அடைய முடியும் என இமாச்சல பிரதேச தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இமாச்சல பிரதேசத்திற்கு வரும் 12ம் தேதி…

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே விரிவான முன்னேற்ற அடைய முடியும் என இமாச்சல பிரதேச தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

இமாச்சல பிரதேசத்திற்கு வரும் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இத்தேர்தலில் ஆம்ஆத்மியும் புதிதாக களம் காண உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அப்போது, காங்க்ரா பகுதி சக்தி பீடங்களின் நிலம், இந்தியாவின் நம்பிக்கையாகவும் இறை யாத்திரை நிலமாக காங்க்ரா விளங்குவதாகவும், இமாச்சல பிரதேசத்திற்கு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தேவை என்றார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி என்பது போல் இரட்டை எஞ்சின் ஆற்றலையும் பெற்றால் தான் சவால்களையும் முறியடித்து புதிய உயரங்களை இமாச்சல் பிரதேச மாநிலம் எட்டும் என்றார். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு காங்கிரஸ் தான் உத்தரவாதம் அளிபார்கள். காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. அவர்களும் அதை விரும்பவில்லை என விமர்சனம் செய்தார்.

https://twitter.com/narendramodi/status/1590230375716069376

மேலும், இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட இந்த இரண்டு மாநிலங்களும் வளர்ச்சி அடைந்ததாக எந்த செய்தியும் வரவில்லை என விமர்சித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநில தேர்தல்களில் மக்கள் வரலாற்றை மாற்றி மீண்டும் பா.ஜ.க.வையே தேர்ந்தெடுத்து உள்ளனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள் வெறும் சண்டைகள் மட்டுமே. இது தொடர்ந்தால் ஒரு மாநிலம் எப்படி வளர்ச்சி அடையும்? அனைவருக்கும் சமூக பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓய்வூதியம் மற்றும் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது.

விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் ஆகியோருக்கு முறையாக 3,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்தோம். நமது நாட்டில் பெண்கள், சகோதரிகள், மகள்கள் காங்கிரஸ் அரசாங்கத்தால் மிகவும் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதை 2014ம் ஆண்டுக்கு முந்தைய நாட்களில் பார்த்தீர்கள். நீங்கள் என்னை உங்கள் மகனாக கருதி ஆசீர்வதித்தீர்கள், நீங்கள் தலைமுறைகளாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நிவர்த்தி செய்தேன் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.