உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு விடுதலை பெற்று தனி நாடான உக்ரைனின்…

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பதிலடி கொடுக்கும் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சோவியத் ஒன்றியம் உடைந்த பின்பு விடுதலை பெற்று தனி நாடான உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்ரமித்தது. உக்ரைனை நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் சேர்க்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்தாண்டு உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்தது. இதனால், ரஷ்யா – உக்ரைன் எல்லையில் அதிகரித்து வந்த போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் எல்லையில் ரஷ்ய படை குவிப்பு குறித்து பைடன் கவலை தெரிவித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உக்ரைனை தாக்கினால், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும உறுதியான பதிலடி கொடுக்கும் என்றும், இதனால் ரஷ்யா மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் பைடன் எச்சரித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.