“நான் ஆணையிட்டால்…” – எம்ஜிஆர் ஸ்டைலில் வெளியான ‘ஜன நாயகன்’ செகண்ட் லுக்!

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தமிழக வெற்றி கழக கட்சியை நடத்தி வரும் விஜய், கடைசியாக எச். வினோத் இயக்கத்தில் தனது 69 படத்தில் நடிப்பதாக அறிவித்தார். கேவிஎன் புரொடெக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது விஜய்க்கு கடைசி படம் என்பதாலும் அரசியல் கதைகளத்தில் உருவாகி வருவதாக கூறப்படுவதாலும்  படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.  இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தினமான இன்று(ஜன.26) காலை வெளியாகி படத்திற்கு  ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்தது.

தொடர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் ‘ஜன நாயகன்’  படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடபோவதாக படக்குழு அறிவித்தது. அந்த வகையில் தற்போது எம்ஜிஆர் ஸ்டைலில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் விஜய் சாட்டையை சுழற்றிவாறு இடம்பெற்றுள்ளார். மேலும்  “நான் ஆணையிட்டால்…” என்ற எம்ஜிஆரின் பாடல் வரியும் இடம்பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.