ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரை மிக மோசமாக இந்திய அணி விளையாடி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இந்திய அணிக்குக் கேப்டனாக இருந்தது டிராவிட்தான்.
இந்நிலையில் டிராவிட்டை தங்கள் ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக்க பல அணிகள் முயற்சி செய்து வருகின்றன. வரிசையாக கிரிக்கெட் வீரர்கள் பயோபிக்குகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராகுல் டிராவிட்டிடம் உங்கள் பயோபிக்கை எடுத்தால் அதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி கேட்கபட்டது.







