ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை | முதல் இடத்தை பிடித்த சுப்மன் கில்… டாப் 10ல் 4 இந்திய வீரர்கள்!

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மன் தரவரிசையில் இந்திய வீரர் சேர்ந்த சுப்மன் கில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரரான சுப்மன் கில் முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த வாரம் வெளியிட்ட தரவரிசையின் போது சுப்மன் கில் 2-வது இடம் பிடித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் சதம் விளாசியதன் மூலம் தற்போது முதல் இடத்திற்க்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான், நியுசிலாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் பாபர் அசாம் சிறப்பாக விளையாடததால் 2-வது இடத்திற்க்கு சரிந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா 3-வது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்ரிக்க வீரர் கிளாசன் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சல் 2 இடங்களில் முன்னேறி 5-வது இடத்திற்க்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி 6-வது இடத்தில் நீடிக்கிறார்.

அயர்லாந்து வீரர் டெக்கர் 7-வது இடத்தையும், இலங்கை வீரர் அசலங்கா 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஷ்ரேயாஸ் அய்யர் ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசை:

1.ஷுப்மன் கில் – 796 புள்ளிகல்
2.பாபர் அசாம் – 773 புள்ளிகள்
3.ரோஹித் சர்மா – 761 புள்ளிகள்
4.ஹென்ரிக் கிளாசன் – 756 புள்ளிகள்
5.டேரில் மிட்செல் – 740 புள்ளிகள்
6.விராட் கோலி – 721 புள்ளிகள்
7.ஹாரி டெக்கர் – 716 புள்ளிகள்
8.சரிதா அசலங்கா – 696 புள்ளிகள்
9.ஷ்ரேயாஸ் ஐயர் – 679 புள்ளிகள்
10.ஷாய் ஹோப் – 672 புள்ளிகள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.