தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

நெல்லை, திண்டுக்கல், தருமபுரி உள்பட 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி, திண்டுக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், நெல்லை, திரூவாருர் ஆகிய 9 மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி இந்து சமய அறநிலைத்துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதன் ஜெய்நாராயணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் ஆட்சியராக ஷேக் அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சதீஷ் தருமபுரி மாவட்ட ஆட்சியராக  நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் ஆட்சியராக இருந்த பூங்கொடி வணிகவரி இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் ஆட்சியராக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி ஆட்சியராக தினேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை ஆட்சியராக சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை ஆட்சியராக தர்பகாராஜ், திருப்பத்தூர் ஆட்சியராக மோகனசந்திரன் நியமனம். திருவாரூர் ஆட்சியராக சிவசௌந்தரவள்ளி, சேலம் பட்டுவளர்ப்பு இயக்குநராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில் நுட்பக் கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம். கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.