உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன் – மாரி செல்வராஜ் உருக்கம்..!

உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன் என மாமன்னன் 50 வது நாள் வெற்றி விழாவை முன்னிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் தனது தாய், தந்தை புகைப்படத்துடன் உருக்கமாக பகிர்ந்துள்ளார். மாரி செல்வராஜ்…

உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டே இருப்பேன் என மாமன்னன் 50 வது நாள் வெற்றி விழாவை முன்னிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் தனது தாய், தந்தை புகைப்படத்துடன் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மாமன்னன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் பாராட்டினர்.

அதேபோல இந்திய அளவில் மட்டுமல்லாது, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவிலான டாப் 10 படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. அதில் மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும், அதனுடன் சேர்ந்து ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் இப்படம் இடம் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 1.2 கோடி மக்கள் இத்திரைப்படத்தைப் பார்வையிட்டிருந்தார்கள்.

Imageஇப்படம் வெளியாகி 50 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டதை படக்குழு சென்னையில் உள்ள திரையரங்கில் நேற்று கொண்டாடியது. இந்த விழாவில் இயக்குனர், கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவரும் கலந்துகொண்டனர். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், உதயநிதிஸ்டாலின் பறக்கும் பன்றிக்குட்டியுடன் உள்ளது போன்ற சிறிய சிலை பரிசாக வழங்கப்பட்டது.

https://twitter.com/mari_selvaraj/status/1692212841699574179

இந்நிலையில் மாமன்னன் படத்தின் 50வது வெற்றி விழாவை முன்னிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாய் தந்தையருடன், தன் கையில் ஒரு பன்றிக்குட்டியையும் வைத்திருக்குமாறு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, “மாமன்னன் 50 வது நாள்… பெருந்துயர் வாழ்வுதான் என்றாலும் அதற்குள் அறத்தையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இந்த அளப்பரிய வெற்றியை சமர்பிக்கிறேன். “உண்மையை கேட்கக்கூடிய காதுகளை நான் தேடிகொண்டே இருப்பேன்” இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.