”லியோ” படத்தை உங்களுடன் பார்க்க விரும்புகிறேன் – ஷாருக்கானுக்கு ரிப்ளை செய்த லோகேஷ் கனகராஜ்..!

ஜவான் படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது அடுத்து வெளியாகவுள்ள லியோ படத்தை ஷாருக்கானுடன் பார்க்க விரும்புவதாக தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம்…

ஜவான் படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது அடுத்து வெளியாகவுள்ள லியோ படத்தை ஷாருக்கானுடன் பார்க்க விரும்புவதாக தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நாளை வெளியாகிறது.

இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.இந்த படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் சுமார் 5 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்று சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது. பிவிஆர் திரையரங்கில் (PVR) 1,12,299, ஐநாக்ஸ் (INOX) 75,661, சினிபோலிஸ் (CINEPOLIS) – 40,577 என மொத்தம் 2,28,538 டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. சுமார் ₹9.01 கோடி ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையானது.

டெல்லியில் 39,535 ( ₹1.91 கோடி), மும்பை- 39,600 ( ₹1.57 கோடி), பெங்களூரூ 39,325 ( ₹1.42 கோடி), ஹைதராபாத்- 58,898 ( ₹1.35 கோடி), கொல்கத்தா 40,035 ( ₹1.16 கோடி ) என இந்தியா முழுவதும் முதல்நாள் காட்சிகளுக்காக 7 லட்சம் டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால், ஜவான் முதல்நாளிலேயே ரூ.100 கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஷாருக்கானின் பதான் படத்தைப்போல் இப்படமும் ரூ.1,000 கோடி வசூல் குவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று ஜவான் படம் வெளியாகும் நிலையில் படக்குழுவை வாழ்த்தும் வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Dir_Lokesh/status/1699424929186205877

இதனை டேக் செய்து நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் ”மிக்க நன்றி. நேரம் கிடைத்தால் படத்தைப் பார்க்கவும். மேலும் படத்தை தமிழில் பார்த்து சரியா உள்ளதா என்று கூறுங்கள். லியோ படத்திற்கு என்னுடைய அன்பு எப்போதும்.” என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/iamsrk/status/1699452244599480396

இதற்கு பதிலளிக்கும் வகையில், இயக்குநர் லோகேஷ், “ஜவான் படத்தை பார்க்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளேன்; ‘லியோ’ வெளியானவுடன், அதை உங்களுடன் சேர்ந்து பார்க்கவும், படத்தை பற்றிய உங்களின் கருத்தை அறியவும் விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Dir_Lokesh/status/1699457337151644007

இன்று படம் வெளியாகும் நிலையில், இவர்களின் இந்த அன்பை பரிமாறும் உரையாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜவான் திரைப்படத்திற்கு ஷாருக்கான் ரசிகர்கள், விஜய் சேதுபதி ரசிகர்கள், அட்லீயின் தனிப்பட்ட ரசிகர்கள் மற்றும் பொதுவான சினிமா ரசிகர்கள் என ஒரு மாபெரும் பட்டாளமே திரையரங்கில் குவிந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.