என்னை வைத்து ஒரு படம் பண்ணுங்க…வெற்றிமாறனுக்கு அழைப்பு விடுத்த ஜூனியர் என்டிஆர்!

தனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன் எனவும், தன்னை வைத்து ஒரு படம் எடுத்தால் நேரடியாக தமிழில் எடுத்து தெலுங்கில் டப் செய்யலாம் எனவும் ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது…

"I want to act in the direction of Vetimaaran..." - Junior NDR who fulfilled his wish!

தனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன் எனவும், தன்னை வைத்து ஒரு படம் எடுத்தால் நேரடியாக தமிழில் எடுத்து தெலுங்கில் டப் செய்யலாம் எனவும் ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குநர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்துக்கு ‘தேவரா பாகம்-1’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று முடிந்தது. சமீபத்தில், இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

வருகிற 27-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு புரொமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று (செப். 17) செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு கலந்துகொண்டது. இதில், ஜூனியர் என்.டி.ஆர், ஜான்விகபூர், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஜூனியர் என்.டி.ஆர், “எனக்கு மிகவும் பிடித்த, இயக்குநர் வெற்றிமாறன் சார் என்னை வைத்து ஒரு படம் பண்ணுங்க. அதை நேரடியாக தமிழில் எடுத்து தெலுங்கில் டப் செய்யலாம்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.