”ஷாருக்கானை பழிவாங்கிவிட்டேன் “ – ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி சொன்ன குட்டி ஸ்டோரி

ஜவான் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி ஷாருக்கானை பழிவாங்கிவிட்டதாக சொன்ன குட்டி ஸ்டோரி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில்…

ஜவான் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி ஷாருக்கானை பழிவாங்கிவிட்டதாக சொன்ன குட்டி ஸ்டோரி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.  நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.

ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறும் என படக்குழு அறிவித்திருந்தது.  இதனிடையே இன்று மாலை சென்னை தாம்பரத்தில் உள்ள தனியர் கல்லூரியில்  நடைபெறும் இசை வெளியீட்டு விழாவுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா மாலை தொடங்கியது. இந்த விழாவில் நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லீ , விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி , யோகி பாபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவுக்காக மாஸ் எண்ட்ரி கொடுத்த நடிகர் ஷாருக்கானுக்கு பலத்த வரவேற்புடன் ரசிகர்கள் உற்சாகமூட்டினர். இதனைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் விஜய் சேதுபதி கட்டி அணைத்தார், மேலும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முத்தம் ஒன்றை கொடுத்து சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதன் பின்னர் பேசிய நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்ததாவது..

” ரசிகர்களின் இந்த எனர்ஜி என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறது. உங்களால் இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருக்கிறது. லவ் யூ ஆல். ஜவான் படம் அட்லியால்தான்  தொடங்கியது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அட்லி பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. இங்கிருந்து நிறைய பேரை‌ மும்பைக்கு கூட்டிச் சென்றுள்ளார்.

தன்னுடன் பழகியவர்களை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு தெரியும். எனக்கு தெறி படம் மிகவும் பிடிக்கும். இது குறித்து அட்லியிடமே நிறைய பேசியுள்ளேன். அட்லி இப்படத்தில் என்னை நிறைய வேலை வாங்கி என்னை சாகடித்தார்.

நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்தேன். ஜானு இல்லாத ராம் எங்கு இருக்கிறார்கள். ஆனால் அந்த பெண் அப்போது ஷாருக்கானை காதலித்தார். அதற்கு பழிவாங்க இத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. ஒருவழியாக பழிவாங்கிவிட்டேன்.

ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் அருகில் எனக்கு சீட் போட்டனர். அவர் என்னிடம் “ நீங்க ரொம்ப நல்ல நடிகர்‌ என்றார். வயது என்ன என்று கேட்டார் நான் 40 என்றேன். நல்லா நடிக்கிறீர்கள் என என்னை பாராட்டினார். எனக்கு  அவரிடம்  பிடித்தது அனைவரையும் சமமாக மதிப்பதுதான்.

ஷாரூக்கானுக்கு மூளை எப்படி இத்தனை வேகமாக வேலை செய்கிறது என  எப்போதும் எனக்கு வியப்பாக இருக்கும். யோகி பாபு சீன்‌ நடிக்கும் போது பார்ப்போம்‌ என்பார். நடிக்கும் போது நிறைய வசனங்கள் பேசுவார் எல்லாம் அவரது சொந்த வசனங்கள். அவருடன் நடிக்கும் போது சிரிக்காமல் இருக்க முடியாது.

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் உடன் ஏற்கனவே முழுநீள இந்திப் படம் நடித்துவிட்டேன். இன்னும் இரண்டு படங்கள் இந்தியில் நடிக்கிறேன். எல்லா இந்தி நடிகைகளும் எனக்கு பிடிக்கும்.” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.