நடிகர் விஜய் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ’ஜனநாயகன்’. விஜயின் கடைசி படமான இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம காரணமாக படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ’ஜனநாயகன்’ படத்தில் இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “விஜய் அண்ணாவும், வினோத் அண்ணாவும் கேமியோ செய்ய அழைத்ததால் ‘ஜன நாயகன்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன். இது குறித்து விரிவாக சொல்ல முடியாது” என்று தெரிவித்தார். இதன்மூலம் ‘ஜன நாயகன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ், கேமியோ ரோலில் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ மற்றும் ’லியோ’ ஆகிய படங்கள் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.







