நான் அமைச்சர்தான்; சிறுவனிடம் புதுச்சேரி அமைச்சர் ஜாலி டாக்

புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, ஒரு சிறுவனிடம் தான் அமைச்சர் எனக்கூறி நம்ப வைக்க பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த சந்திர பிரியங்கா அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக…

புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, ஒரு சிறுவனிடம் தான் அமைச்சர் எனக்கூறி நம்ப வைக்க பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த சந்திர பிரியங்கா அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். இவரது வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும். கடந்த ஜனவரி மாதம் வளையலணி விழாவில் இவர் நடனமாடிய வீடியோவும் வைரலானது.

இந்த நிலையில் தற்பொழுதும் அவர் சினேக் பாபு வடிவேல் காமெடியில் வருவதுபோல் வணிக நிறுவனத்தில் தன்னை அமைச்சர் என நம்ப மறுக்கும் சிறுவனிடம் நான்தான் அமைச்சர் என விளையாடும் வீடியோ காரைக்காலில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், நான் அமைச்சர்னு நீ நம்பணுமா என்று சிறுவனிடம் கேட்கும் அமைச்சர், அப்படியென்றால் நான் அங்கு சென்று ஒளிந்துகொள்கிறேன், நீ அமைச்சர் என்று கூப்பிடு, நான் உடனே வந்து நான் தான் அமைச்சர் என சொல்கிறேன், அப்போது நம்புவாயா என்கிறார். அதற்கு சிறுவனும் ஒப்புக்கொள்கிறேன்.

சொன்னதுபோலவே ஒளிந்திருந்து வந்து அந்த சிறுவனிடம் நான்தான் அமைச்சர் என்கிறார் சந்திரபிரியங்கா. அதன்பிறகு அந்த சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்து அனுப்புவிடுகிறார். இந்த காட்சியும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.