முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஹைதராபாத்தில் மீண்டும் டபுள்-டக்கர் பேருந்துகள்

ஹைதராபாத்தில் மீண்டும் டபுள்-டக்கர் பேருந்துகளை அந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வரும் 11-ம் தேதி நான்காவது ஏபிபி எப்ஐஏ பார்முலா இ சாம்பியன்ஷிப் போட்டி ஹைதரபாத்தில் நடைபெற இருக்கிறது. பார்முலா இ கார் பந்தயம் இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத்தில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையொட்டி மூன்று டபுள்-டக்கர் பேருந்துகளை தெலங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  டபுள்-டக்கர் பேருந்துகள் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை தற்போது தெலங்கானா அரசு நிறைவேற்றியுள்ளது. 2003ம் ஆண்டு வரை டபுள்-டக்கர் பேருந்து ஹைதரபாத்தில் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி அரசு அதிகாரிகள் கூறுகையில், “இந்த எலெக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்துகள் பார்முலா இ கார் பந்தயம் நடக்கும் பகுதிகள் முதலில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 11-ம் தேதிக்குப் பிறகு இந்த பேருந்துகள் பாரம்பரிய சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில் பயன்பாட்டுக்கு வரும்” என்று கூறுகின்றனர்.

ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி குழுமம் மொத்தம் 6 டபுள்-டக்கர் பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளது. அதில் மூன்று பேருந்துகள் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டி வில்லியர்ஸ் அதிரடி; மும்பையை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது RCB

G SaravanaKumar

புத்தாண்டு கொண்டாட்டம்: பாதுகாப்புப் பணியில் 13,000 போலீசார்

Halley Karthik

மேற்கு வங்கத்தில் கல்விக் கடன் பெற மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு

EZHILARASAN D