முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

நடிகர் சங்க தேர்தல்: ஹீரோவின் கையை கடித்த நடிகையால் பரபரப்பு

நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட மோதலில் நடிகரின் கையை, நடிகை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா’(MAA) வுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் பிரகாஷ் ராஜ் தலைமையில் ஒரு அணியும், மோகன்பாபு மகன் விஷ்ணு மன்சு தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன. தலைவர் பதவியை கைப்பற்ற பிரகாஷ்ராஜ், விஷ்ணு மன்சு இருவருமே மாறி மாறி நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர். பின்னர் இருவருமே ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி விமர்சித்தனர். இது சர்ச்சையானது.

பிரகாஷ் ராஜ், விஷ்ணு மன்சு

இந்நிலையில் நேற்று வாக்குப் பதிவு நடந்தது. இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தலைவராக விஷ்ணு மன்ச் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் பிரகாஷ் ராஜ் அணியை சேர்ந்த அடையாளம் தெரியாத ஒருவர், வாக்குப் பதிவின் போது பிரசாரம் செய்தார். அதை மனோன் மன்சு அணியை சேர்ந்த நடிகர் சிவபாலாஜி எதிர்த்தார். இவர், நடிகை ’குடைக்குள் மழை’ மதுமிதாவின் கணவர். தமிழில் இங்கிலீஷ்காரன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சிவபாலாஜி

அப்போது பிரகாஷ்ராஜ் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகை ஹேமா, நடிகர் சிவ பாலாஜி கையை திடீரென கடித்தார். இதை எதிர்பார்க்காத சிவபாலாஜி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஹேமா அங்கிருந்து சென்றுவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி நடிகை ஹேமாவிடம் கேட்டபோது, நான் சிவ பாலாஜியை கடித்தது உண்மை தான். காரணமில்லாமல் யாரும் எதையும் செய்யமாட்டார்கள். ஏன் கடித்தேன் என்பதை அவரிடமே கேளுங்கள்’ என்றார்.

இந்த கடி பற்றி நடிகர் சிவபாலாஜி கூறும்போது, அடையாளம் தெரியாத நபர், அவர்கள் அணிக்கு பிரசாரம் செய்ததை எதிர்த்தேன். அப்போது என் பின்னால் நின்ற ஹேமா, என் கையை திடீரென கடித்தார். அவர் ஏன் கடித்தார் என்பது தெரியாது என்றார். நடிகை ஹேமா, சிவபாலாஜியை கடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

மருத்துவமனை ஊழியர் பணி நீக்கத்திற்கு நடிகர் அஜித் காரணமா?

Gayathri Venkatesan

சென்னை வந்தடைந்த 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை!

Jeba Arul Robinson