சுத்தி…சுத்தி வந்தீங்க… – வைரலாகும் சூறாவளி

அமெரிக்காவில் நிலப்பரப்பு மீது அதிவேகமான சூறாவளி காற்று ஏற்பட்டு, அது வான் நோக்கி சுழண்டு செல்லும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.   அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சூறவாளி…

அமெரிக்காவில் நிலப்பரப்பு மீது அதிவேகமான சூறாவளி காற்று ஏற்பட்டு, அது வான் நோக்கி சுழண்டு செல்லும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சூறவாளி காற்று உருவாகியுள்ளது. அதிவேகமாக ஆக்ரோசத்துடன் சுற்றி சுற்றி சூறாவளி காற்று வீசியதால், அந்த பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இந்த சூறாவளி காற்றால் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்களை சேதமானதாக கூறப்படுகிறது.

மேலும் நிலப்பரப்பு மீது ஏற்பட்ட சூறவாளி வானை நோக்கி சுழண்டு சுழண்டு சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும், அங்கிருப்பவர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டதால், அந்த காட்சிகள் இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. சினிமாவில் பார்ப்பது போன்று சூறாவளிக்காற்று வானை நோக்கி சென்றது பார்ப்பவர்களை பிரமிப்படைய வைக்கிறது. மேலும் காற்றுடன் சேர்ந்து அங்குள்ள குப்பைகளும், வீடுகளின் மேல் கூரைகளும் அடித்து கொண்டு காற்று வீசியது அந்த வீடியோ காட்சிகள் பார்க்க முடிகிறது.

 

இதனிடையே, ஓக்லஹோமா பல்கலைக்கழக வானிலை ஆய்வு மாணவர்கள் மூன்று பேர், சூறாவளி காற்று வீசிய அதே நாளில் ஒரு விபத்தில் உயிரிழந்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சூறைக்காற்று ஏற்பட்ட விபத்தில் யாரேனும் மாட்டி கொண்டார்களா? அல்லது பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதா? என அந்நதாட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.