இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று (நவம்பர் 10) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை.
முதல் போட்டியில் விளையாடிய பிளேயிங் லெவனுடனே இந்தப் போட்டியிலும் களமிறங்குகிறது. தென்னாப்பிரிக்க அணியில் பாட்ரிக் க்ரூகருக்குப் பதிலாக ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.







