கோடையில் தலைமுடியை பராமரிப்பது எப்படி? இதோ உங்களுக்கான டிப்ஸ்!

கோடை காலத்தில் தலைமுடியை பராமரிப்பு எப்படி என்பது பற்றி பார்க்கலாம். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கோடைகாலத்திற்கு ஏற்றவாறு நமது சருமத்தை பராமரிப்பது போல  நமது தலைமுடியையும்…

கோடை காலத்தில் தலைமுடியை பராமரிப்பு எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கோடைகாலத்திற்கு ஏற்றவாறு நமது சருமத்தை பராமரிப்பது போல  நமது தலைமுடியையும் பராமரிப்பது அவசியம்.  ஏனெனில் காலநிலை மாற்றத்தினால் தலைமுடி மற்றும் மயிர்கால்கள் வறண்டு,  அரிப்பு மற்றும் பொடுகு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.  மேலும் அத்துடன் முடி உதிர்வு ஏற்படலாம்.  இந்த நிலையில் கோடை காலத்தில் தலைமுடியை பராமரிப்பு எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.

  • ஊட்டச்சத்துக்கள் நிறைந் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • காலநிலை மாற்றத்தால் உணவு பழக்கத்திலும் நாம் ஒரு சில மாற்றங்களை செய்வோம். இதன் விளைவாகவும் தலைமுடி சேதம் அடையலாம்.
  • பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
  • அதிக புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
  • போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • எந்த காலமாக இருந்தாலும் தலை முடிக்கு எண்ணெய் தடவ வேண்டும்.
  • குறைந்தபட்சம் வாரத்திற்கு 2 முறையாவது தலைமுடியின் வேர்கள் முதல் நுனி வரை எண்ணெய் தடவ வேண்டும்.

  • எண்ணெய் தடவுவதோடு விடாமல் மயிர்க்கால்களை மசாஜ் செய்வது நல்லது.  இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி,  போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கவும் செய்கிறது.
  • தலைமுடிக்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான எண்ணெயை பயன்படுத்துவது நல்லது.
  • காலநிலை மாற்றத்தால் தலைமுடி வறண்டு போய்,  எண்ணெய் பிசுக்கோடு காணப்படும்.
  • வெப்பமான மற்றும் ஈரப்பதம் நிறைந்த வானிலையில் மயிர் கால்களில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் வியர்வை உற்பத்தியாகும்.
  • இதனால் தலைமுடி மற்றும் மயிர்க்கால்களை சுத்தம் செய்து அதனை ஈரப்பதத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும்.
  • வாரத்திற்கு குறைந்தது 3 முறை ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள்.
  • தலைமுடி வெயிலில் படும் போது நுனிப்பகுதியில் வெடிப்பு ஏற்பட்டு காணப்படும்.  இதனால் தலைமுடியை ட்ரிம் செய்ய வேண்டும்.  இதனால் தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும்.  ஒவ்வொரு 3 முதல் 4 மாதங்களுக்கு ஒரு முறை தலைமுடியை ட்ரிம் செய்வது நல்லது.

  • தலைமுடிக்கு செய்யும் ஸ்ட்ரெயிட்னிங் உள்ளிட்ட வெப்ப சிகிச்சைகளை தவிர்ப்பது நல்லது.  ஏனெனில் வெப்பம் தலைமுடியை பாதித்து அதனை வலுவிழக்க செய்துவிடும். மேலும் தலைமுடி வறண்டு,  எளிதாக உடைந்து விடும்.  இதன் காரணமாக மோசமான முடி உதிர்வு ஏற்படலாம்.
  • சூடான நீரை தவிர்த்து வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி தலைமுடியை அலசுவது நல்லது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.